06.12.17- 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருது வழங்கி வைப்பு..

posted Dec 5, 2017, 5:14 PM by Habithas Nadaraja
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” விருதும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டின் கீழ் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று காலை (05) இடம்பெற்ற இந்த விழாவுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருதினை இலங்கை நிருவாக சேவையில் (SLAS) கடமையாற்றுகின்ற ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலையில் விஷேட செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.  
ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் 


Comments