06.12.17- 24ஆயிரம் மாணவரின் சீருடை வவுச்சர்களை உடனடியாக வழங்கவேண்டும்..

posted Dec 5, 2017, 5:08 PM by Habithas Nadaraja
24ஆயிரம் மாணவரின் சீருடை வவுச்சர்களை உடனடியாக வழங்கவேண்டும்!சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் அதிபர்களுக்கு உத்தரவு!

எமது வலயத்திலுள்ள 24275 மாணவர்களுக்குமான சீருடைத்துணி வவுச்சர்களை உடனடியாக அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் அதிபர்களைப் பணித்தார்.

சம்மாந்துறை வலயத்தின் 71 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களுக்கான அவசரக்கூட்டத்தில் வைத்து இந்த அறிவித்தலை அவர் விடுத்தார்.

அவர் அங்கு கூறுகையில்:
இறக்காமக்கோட்டத்திலுள்ள 3672 மாணவர்களுக்கும் நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள 4773 மாணவர்களுக்கும் சம்மாந்துறைக் கோட்டத்திலுள்ள 15830 மாணவர்களுக்கும் இன்று சீருடை வவுச்சர்கள் தங்களிடம் வழங்கப்படுகின்றன.இவற்றை முடியுமானவரை விரைவாக மாணவர்களிடம் வழங்கவேண்டும். தாமதிக்கவேண்டாம்.


Comments