06.12.17- பட்டிருப்பு தேசிய பாடசாலையில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..

posted Dec 6, 2017, 9:00 AM by Habithas Nadaraja
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று ( 6 ) பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினையும் அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமானப் பணியொன்றினையும் ஒழுங்கு செய்திருந்தனர்.

பாடசாலை பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜீ .சுகுனன் , தாதி உத்தியோஸ்தர்களான திருமதி எஸ்.ஜீவன் , ஏ.எஸ்.எம்.நசூஹான் ஆகியோர் மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விரிவுரையை நிகழ்த்தியதுடன் வைத்தியசாலையின் பல் வைத்தியர் டாக்டர் ஏ.எச்.எம்.சஸ்லி மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

( வடிவேல் சக்திவேல் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
Comments