06.12.18- சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது..

posted Dec 5, 2018, 5:51 PM by Habithas Nadaraja
சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது 
 அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ்

வறுமையின் பாதிப்பை மாணவர்கள் உணராமல் கல்வியை தொடர்வதற்காகவே சமுர்த்தி சிப்தொற கல்விப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.

சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் கௌரவிப்பு நிகழ்வும்  (04.12.2018)  சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ்யின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எல்.யூ.ஜூனைதா, எம்.எஸ்.எம்.மனாஸ், ஏ. கபூர், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் எம்.எம்.றசீட், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன், தொழிலதிபர் எம்.ஜூனூத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், மாணவ மாணவிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீதம் இரண்டு வருடத்திற்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் வழங்கி  வருகின்றது. அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கும் 16 மாணவர்களுக்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் காசோலை வழங்கப்பட்டதுடன் புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கூடுதல் நிதிகளை சேகரித்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இதன்போது அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கல்வி அபிவிருத்தி ஊடாக குடும்பங்களை வலுவூட்டுதல் சிப்தொற புலமைப் பரிசில் திட்டத்தின்  செயற்பாடாகும். சிறந்த கல்வி அடைவின் மூலம் கூடுதல் வருமானங்களை பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்கள் இன்று காணப்படுகின்றது. இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் வறுமை நிலையிலிருந்து மாறிவருகின்றது.

சமுர்;த்தி திட்டம் தங்கி  வாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது. சமுர்த்தி வலுவூட்டல் திட்டத்தினூடாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி அவர்களினூடாக ஏனைவர்களுக்கு தொழில்களை வழங்கக் கூடியவர்களாக அவர்களை மாற்றுதல் வேண்டும். இதற்காக பல்வேறு  திட்டங்களை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இன்றுவரை நடைமுறைப்படுத்தி  வருகின்றது.

நாட்டின் அபிவிருத்திற்கு பயன்படுத்தப்படும் நிதிகளில் நிவாரணத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சமுர்த்தி நிவாரணத்திற்காக திறைசேரி வருடாந்தம் 45 வில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்கின்றது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை நிர்மாணிப்பதற்கு 1200 வில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாட்டின் 3 வருடத்திற்கான சமுர்த்;தி நிவாரண நிதியினை சேகரிப்பதனால் நாட்டின் அபிவிருத்திற்கான ஒரு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றினை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

(றியாத் ஏ. மஜீத்)









Comments