07.07.19-வவுனியாவில் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டம்..

posted Jul 6, 2019, 8:38 PM by Habithas Nadaraja
இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள Vydexa (lanka) power corporation (Pvt.) Ltd என்ற நிறுவனம் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 10 மெகா வோல்ட் மின்சக்தி திட்டத்தை வவுனியாவில் காத்தான் சின்னக்குளம் என்ற இடத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொகுதி திட்டம் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிராம மக்களுக்கு முழு அளவில் மின்சாரத்தை வழங்கக்கூடிய திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு நாளாந்தம் சூரிய ஒளி முறையாக கிடைப்பதற்கான வசதிகள் இங்கு இருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3800 மெற்றிக்தொன் டீசல் மூலமாக பெறப்படும் மின்சாரத்திற்கான செலவு சேமிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வீதி விளக்குகள் வழிபாட்டு தலங்களுக்கான மின்சாரம் உள்ளிட்ட உள்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இச்செயற்திட்டத்தின் மூலம் மேம்படையக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments