07.08.19- இராணுவப் பாதுகாப்புடன் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்..

posted Aug 6, 2019, 5:48 PM by Habithas Nadaraja   [ updated Aug 6, 2019, 6:01 PM ]
நாடளாவியரீதியில் இலங்கைப்பரீட்சைத்திணைக்களம் நடாத்தும் க.பொ.த. உயர்தரப்பரீட்சை (05.08.2019) சுமுகமாக ஆரம்பமாகியது.

நாடுமுழுவதும் 2678 பரீட்சை நிலையங்களில் 3லட்சத்து 37ஆயிரத்து 704பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.வடக்கு கிழக்கில் பரீட்சைநிலையங்களுக்கு இராணுவப்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் நேரகாலத்துடன் ஆலயத்திற்குசென்று வழிபட்டு பெற்றோரினதும் பெரியோரினதும் ஆசீர்வாதத்துடன் மண்டபத்திற்குச்சென்றனர்.

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரியிலுள்ள பரீட்சை மண்டப நுழைவாயிலில் இராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகமானமுறையில் செல்லும் மாணவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.

இதேவேளை (5) திங்கட்கிழமை நாடளாவியரீதியில் ஆரம்பமாகிய க.பொ.த.உயர்தரப்பரீட்சை கல்முனைக்கல்விமாவட்டத்தில் 69பரீட்சை நிலையங்களில் நடைபெற்றுவருகிறது.

இதில் பழையபாடத்திட்டத்திற்கான பரீட்சார்த்திகளுக்கு 35பரீட்சை நிலையங்களும் புதியபாடத்திட்டப்பரீட்சார்த்திகளுக்கு 34பரீட்சை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிராந்திய இணைப்புநிலையம் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிமனையில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

காரைதீவு  நிருபர்
Comments