07.09.19- சிரேஸ்ட பிரஜைகளுக்கான மருத்துவ முகாம்..

posted Sep 7, 2019, 7:04 AM by Habithas Nadaraja
காரைதீவு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் முதியோர் தேசிய செயலகம் , ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவுட்டல் அமைச்சு என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த சிரேஸ்ட பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் இன்று  (07.09.2019 ) மாளிகைக்காடு
அல் ஹுஸைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , தாதியர்கள் , மருத்துவ உத்தியோஸ்தர் கலந்து கொண்டு முதியோருக்கான மருத்துவ சேவையினை இலவசமாக வழங்கினார்கள்.

வாய்ச்சுகாதார மற்றும் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனை , கண்நோய் , காது நோய் , தொற்றா நோய்கள் , இரத்தப் பரிசோதனை , நீரழிவு , உயர் குருதி அழுத்தம் , உயர் கொழுப்பு போன்ற நோய்கள் தொடர்பான பரிசோதனை , ஆயள்வேத மருத்துவ பரிசோதனை என்பன வைத்தியர்களார் நிகழ்த்தப்பட்டன.

மேற்படி மருத்துவ முகாமில் காரைதீவு பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , மாளிகைக்காடு மேற்கு கிராம சேவைகள் உத்தியோஸ்தர் ஏ.ஏ.நஜீம் , மாளிகைக்காடு கிழக்கு  கிராம சேவைகள் உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.அலியார் , மாளிகைக்காடு மத்தி  கிராம சேவைகள் உத்தியோஸ்தர் எம்.ஆர்.ஜபீன் உட்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)Comments