08.01.18- மயிலின் நிலையான செல்வாக்கை அதிகரிக்கும் மருதமுனை கலீல்..

posted Jan 8, 2018, 8:57 AM by Habithas Nadaraja
மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவரும் கல்முனை மாநகர சபையின் மயில் சின்னத்தினுடைய தேசிய பட்டியலில் வேட்பாளரும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இணைப்புச் செயலாளருமான எம்.எம்.எம். கலீல் அவர்களின் அ.இ.மக்கள் காங்கிரஸ் கட்சிக்கான வருகையானது சம கால அரசியலில் ஏனைய கட்சிகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் வருகையால் ஏனைய கட்சிக்கார்ரர்களுக்கு பாரிய சரிவை ஏற்படுத்தி வருவதோடு ஒவ்வொரு நாளும் இரவு பகல் பாராது மாற்று கட்சிக்கார்ரர்களை கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் மும்மூரமாக செயற்படுத்தி வருவதால் மாற்று கட்சிக்கான ஆதரவு மக்களிடத்தில் பாரிய வீழ்ச்சி கண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

எதிர் வரும் மாநகர சபைத்தேர்தலில் கல்முனை மாநகர சபையை அ.இ.ம.காங்கிரஸ் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றி சபை ஆட்சி செய்வதற்கான ஆதரவு மக்கள் மத்தியில் பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை மாநகர சபையில் மயில் சின்னத்தில் மருதமுனையில் களமிறக்கப்பட்டுள்ள 4 வேட்பாளர்களர்களும் மாநகர உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவது உறுதியாகி விட்டதாகவும் அவர்களின் வெற்றிக்கான பாரிய பங்களிப்பை மத்திய குழுத் தலைவர் கலீல் தீவிரப்படுத்திவருவதோடு இளைஞர்கள் புத்திஜீவிகள் கல்விமான்கள் உலமாக்களோடு நெசவு கைத்தொழில் ஊக்குவிப்பாளர்களும். இவருடன் கைகோர்த்தமை வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

அதுமாத்திரமல்ல கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பா க ஒரு பகுதி மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்ற கொண்டனர் இவ்விடயம் வரலாற்றுப் பதிவாகும்.

மருதமுனையில் அரசியல் சமகால நடவடிக்கைளை அவதானிக்கும்போது தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் இவரின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதுடன் இவரின் தலைமையில் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருவாது உறுதியாகி விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் ( G.C.E A/L) உயர் தர பரீடசையில் சித்திபெற்ற மாணவர்களின் பிரிதொரு கல்வியை தொடர்வதற்கான செயற்திட்டத்தை உருவாக்குவதாகவும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுகொடுப்பது தொடர்பாகவும் நெசவுக்கைத்தொழிலுக்கான நவீன இயந்திரங்களைமற்றும் வீதி அபிவிருத்திகள் பௌதிக வள அபிவிருத்திகள் பெற்றுக் கொடுப்பதற்கும் தலைவர் கலீலால் அ.இ.ம. காங்கிரஸ் தலைவருடன் தெரிவித்து இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

(றியாஸ் இஸ்மாயில்)


Comments