08.01.19- புதிய வடக்கு ஆளுநர் கௌரவ இரா.சம்பந்தன் சந்திப்பு..

posted Jan 8, 2019, 9:41 AM by Habithas Nadaraja   [ updated Jan 8, 2019, 9:42 AM ]
வடக்கு மாகாணத்தின்  ஆளுநராக நியமனம் பெற்ற கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். 

கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடக்கு ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு  இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.   

Comments