08.01.19- உளநலம் குன்றியவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் மாநகரசபை உறுப்பினர் ராஜன்..

posted Jan 8, 2019, 9:37 AM by Habithas Nadaraja
மனநலம் குன்றிய  கோபி என்பவர் கல்முனை வீதியில் அலைந்து திரிந்தார். கல்முனை. மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  அவரை மக்களின் உதவியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநோய் பிரிவில் சேர்த்துள்ளார். இவர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர்.

முதலில் அவரை அழைத்துவந்து   முடிமழித்து சவரம்செய்து நீராட்டி உணவுகொடுத்து  பின்னர் வைத்தியசாலைக்குக்கொண்டுபொயச் சேர்த்துள்ளார்.

இந்தப்பணி பலரையும் மனிதாபிமானத்துடன் உறுப்பினர் ராஜனை பார்க்கவைத்துள்ளதுடன் பலரும் அவருக்கு நன்றிகூறினர்.

காரைதீவு  நிருபர் 
Comments