08.04.21- சேதனப் பசளை உற்பத்திக்காக ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..

posted Apr 7, 2021, 6:26 PM by Habithas Nadaraja
விஷமற்ற விவசாய உற்பத்திகளை வலுப்படுத்துவதை நோக்காகக்கொண்டு தரமானதும் சிறந்ததுமான சேதனப் பசளைகளின் உற்பத்திக்காக ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பசளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் கொமேர்ஷல் உரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.வருடம் ஒன்றுக்கு இரசாயன உரங்களைக் கொண்டுவருவதற்காக 35 பில்லியன் ரூபா வரையில் செலவிடப்படுகின்றது. அதனை மேலும் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.


Comments