08.04.21- நீதி நூல்கள் கண்காட்சி ..

posted Apr 7, 2021, 6:04 PM by Habithas Nadaraja
இந்து சமய கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  திருக்கோவில் பிரதேச செயலகமும்இ அறநெறிப்  பாடசாலைகளும்  இணைந்து  நடத்தும்   மாணவர்களுக்கு  நீதி நூல்கள் மற்றும்  துணைநூல்கள் வழங்கும்   அறிமுக விழா   திருக்கோவில்  பிரதேச  செயலக கட்டிடத்தில்  இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் தலைமையில்   நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  வே.ஜெகதீசன்  சிறப்பு  அதிதியாக   உதவிப் பிரதேச  செயலாளர்  கே. சதிஸ்சேகரன் கணக்காளர்   எஸ். அரசரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வதைக்காணலாம்.
 
வி.ரி.சகாதேவராஜா 
Comments