08.04.21- திருமலை மாவட்டத்தில் முதலாவது ஆளுமையுள்ள பெண்ணாக மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதருக்கு கௌரவம்..

posted Apr 7, 2021, 6:15 PM by Habithas Nadaraja
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கே.ரி.வி தனியார் ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த “ஆளுமையுள்ள பெண்களை” பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (06) மாலை திருகோணமலை ஜிப்லி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனூராதா ஜஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 ஆளுமையுள்ள பெண்களுக்கான ஞாபகச் சின்னம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 ஆளுமையுள்ள பெண்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் கடந்த 10 வருடகால சேவையில் சுதேச மருத்துவத்துறையை பாரிய வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுத்துச் சென்றார் என்பதற்கமைவாக முதலாவது ஆளுமையுள்ள பெண்ணாக அவர் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


பைஷல் இஸ்மாயில் 
Comments