08.04.21- வயலுக்குள் கால்நடைகள் அத்துமீறிநுழைந்தால் 2000ருபா தண்டம்! திருக்கோவில் விவசாயக்கூட்டத்தில் தீர்மானம்..

posted Apr 7, 2021, 6:11 PM by Habithas Nadaraja
கால்நடை அத்துமீறி வயல் நிலங்களுக்குள் நுழைந்தால் தண்ட பணமாக ஒரு கால் நடைக்கு  2000/- ருபாய் தண்டப்பணமாக வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மொத்த 1890 ஏக்கர் விவசாய உற்பத்தியாளருக்கான சிறுபோக ஆரம்ப கட்டப் பொதுக்கூட்டம்  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்  இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கு  மேலும்  சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன
தீர்மானங்கள்.

பாய்ச்சல் நில நீர் வினியோகம் 2021.03 27 வயல் நெல்  விதைப்பு  திகதி2021.03.31 தொடக்கம் 2021.04.12வரை
இறுதி பாய்ச்சல் நீர் விநியோகம் 2021.7.15வரை
வயல் அறுவடை ஆரம்பம்,திகதி 2021.8.01.தொடக்கம் 2021.08.15
விதைக்கப்பட வேண்டிய நெல் இனம் 3அரை மாதம்நெல் தொகுதி
காப்புறுதி கட்டும் திகதி 2021.4.20
கால்நடை மேய்ச்சல் தடைபடும் காலப்பகுதி 2021.03.21 தொடர்கம் 9.2021.08.20வரையான கால்நடைகள் அப்பகுதி மேய்ச்சலில் இருந்து தடைபடுகின்றது.
அறுவடை செய்யும் இயந்திரங்களின் கூலி டயர் 4000  பட்டி 6000
உழவு இயந்திர உழவுக்கூலி 6000/-ரூபாய்

 வி.ரி.சகாதேவராஜா
Comments