08.09.19- கூடுதலான விலைக்கு கோதுமை மா - விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை..

posted Sep 7, 2019, 8:16 PM by Habithas Nadaraja
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பிறிமா நிறுவனம் தமது அங்கீகாரம் இன்றியே கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை ஐந்து ரூபா 50 சதத்தினால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்தது. இதனால் பாணின் விலையை இரண்டு ரூவாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாயின் அதற்காக அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.


Comments