09.06.19- வறட்சி - வடக்கு, கிழக்கில் 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

posted Jun 8, 2019, 5:57 PM by Habithas Nadaraja
தற்போது நிலவும் வறட்சிக் காலைநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்காக அந்த மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.தேவைக்கு ஏற்ப நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும், கிழக்கில் பல பிரதேசங்களிலும் வறட்சிக் காலநிலையினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Comments