09.07.19- கல்வி பொது தராதர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை..

posted Jul 8, 2019, 5:51 PM by Habithas Nadaraja
எதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் இம்முறை க.பொ.த (சா\த ) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப்பணி பூர்த்தி செய்யப்படும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இது வரையில் 90 சதவீதமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வழமையாக வருடத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக 350 000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


Comments