09.09.19- தமிழா வலையமைப்பின் கல்விப்பிரிவினரால் க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கான இலவச பயற்சி நூல் வெளியீடு..

posted Sep 8, 2019, 6:04 PM by Habithas Nadaraja
வித்யாசாகர் கலை மன்றம் மற்றும் தமிழா வலையமைப்பு ஆகியன சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஆதரவுடன் "W zero"  செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி 1 ஐ உள்ளடக்கிய செயல் நூல்களை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரில்  தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பளார் எஸ்.முஹம்மது ஜெலீஸ்அவர்களின் தலைமையில்  (07.09.2019) நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும், கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களும், சிறப்பு அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலய பொறியியளார் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் மேலும் நூலாசிரியர் எம்.ஐ. அகமட் லெவ்வை , ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர்  அல்ஹாஜ்.மு.ஆ.முஸ்தபா , சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஏ.சபூர்த்தம்பி ,  தமிழா ஊடக வலையமைப்பின் எம்.ஐ. அச்சி முஹம்மட் , திருமதி. பாயிஸா நௌபல், ஜே. எம். பாஸித்  மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

Comments