09.10.19- பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஜந்து புலமை பரிசீல் பரீட்சையில் 232 மாணவர்கள் சித்தி..

posted Oct 8, 2019, 6:04 PM by Habithas Nadaraja
பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஜந்து புலமை பரிசீல் பரீட்சையில்  232 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இது சென்றவருட சித்தி வீதத்தினைவிட பாரிய  அதிகரிப்பாகும் எதிர்காலத்தில் அனைத்து பொதுப்பரீட்சைகளிலும் இவ்வாறான பாரிய சித்திவீத அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என    வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள புலமை பரிசீல் பரீட்சையின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சித்தி வீதம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது   தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

கடந்து வருடம் எமது வலயத்தில் 152 மாணவர்களே சித்தி பெற்றிருந்தனர் ஆனால் இம்முறை 253 மாணவர்கள் வெட்டுபடபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர். கடந்த வருட பெறுபேற்றினை  சவாலாக கொண்டு அனைத்து பாடசாலைகளுக்கும்; பெறுபேற்றினை உயர்த்தும் நோக்குடன் இரண்டு திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்; அதன்இதன்விளைவாக  இம்முறை எமது வலயத்தின் பெறு பேற்றில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்
 
]எமது வலயத்தினை பொறுத்த வரையில் படுவான் கரைபிரதேசத்தினை அண்டி காணப்படும்  கஸ்ர அதிகஸ்ர பாடசாலைகளின் சித்திவீதமானது எமக்கு கடந்த காலங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இம்முறை அப்பிரதேச பாடசாலைகளின் பெறுபேறானது மிகவும் முன்னேற்றம் எமக்கு கிடைத்த இரண்டாவது பாரிய வெற்றியாகும். சேன்ற முறை போரதீவுப்பற்றுக் கோட்டத்தமிலே 22 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர் ஆனால் இம்முறை 52 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். ஆதிகஸ்ரபாடசாலையான  ஆனைகட்டியவெளி பாடசாலையில் இம்முறை 8 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். அப்பாடசாலையில் 70 புள்ளிகளுக்கு மேல் 100 வீதமான மாணவர்கள் பெற்றுள்ளனர்.இதற்கா பாடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர் காலத்தில் நடைபெறவிருக்கும் பொதுப்பரீட்சைகளில் இது போன்ற சீத்திவீத அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அரவ் இதன்போது தெரிவித்தார்..

 காரைதீவு நிருபர்Comments