10.01.19- சொந்தக்காலில் நிற்க புலம்பெயர் சொந்தங்கள் உதவிக்கரம்..

posted Jan 9, 2019, 5:21 PM by Habithas Nadaraja
போரினாலும் வெள்ளத்தினாலும் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு சொந்தக்காலில் நின்று நிரந்தர வாழ்வாதாரத்துடன் வாழ புலம்பெயர் உறவுகள் வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளன.

கனடா மலேசியா லண்டன் ஆகிய நாடுகளிலுள்ள 3 தமிழ்க்குடும்பங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச்சேர்ந்த 2குடும்பங்களுக்கும் வவுனியாவைச்சேர்ந்த ஒரு  குடும்பத்திற்கும் மாடுகளையும் தையல் கடைவைக்க உதவிகளையும் செய்துள்ளது.

லண்டன் அசிஸ்ற் ஆர்ஆர் (UK Assist R.R.)அமைப்பின் தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் இதற்கான உதவிகளை நேரில் வந்து வழங்கியுள்ளார்.

இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு லண்டன் அசிஸ்ற் ஆர்ஆர் ((UK Assist R.R.)
 
அமைப்பு ஒரு தொகுதி நுளம்புவலைகளையும் துவாய் மற்றும் படுக்கைவிரிப்புகளை வழங்கிவைத்துள்ளது.

அவ்வமைப்பின் இலங்கைக்கிளையின் பொருளாளரும் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளருமான  எந்திரி என்.சிறிஸ்கந்தராஜா அவற்றை உரியவர்களிடம் வழங்கிவைத்தார்.

லண்டன் அசிஸ்ற் ஆர்ஆர் (.(UK Assist R.R.) அமைப்பின் தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் கூறுகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்க தாம் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதற்கு உதவ விரும்பும் பரோபகாரிகள்  https://mydonate.bt.com/events/assistrr-donations/385374 https://mydonate.bt.com/events/assistrr-donations/385374
 என்ற விலாசத்துடன் தொடர்புகொள்ளமுடியுமென்றார்.

ஒவ்வொரு மாணவனுக்கும் தலா 1000ருபா பெறுமதிகொண்ட கற்றலுபகரணப்பார்சலை இலங்கைக்கிளையினூடாக வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக கலாநிதி சர்வேஸ்வரன் லண்டனிலிருந்து தெரிவித்தார். சிறுவர் பட்டினி நிவாரண நிதியம் ((CHRF UK)) மேற்படி துவாய் மற்றும் பெட்சீற்றை அன்பளிப்புச்செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காரைதீவு  நிருபர் 

Comments