11.04.19- மனிதனைக் கருவறுக்கும் மற்றுமொரு வரி காபன்வரி வாகன உரிமையாளர்கள் ஆதங்கம் நிறுத்துமாறு மனு..

posted Apr 10, 2019, 6:20 PM by Habithas Nadaraja   [ updated Apr 10, 2019, 6:28 PM ]
மனிதர்களை மெல்லெனக்கொல்லும் மற்றுமொரு வரியாக வாகனத்திற்கான காபன்வரி(Carbon Tax) கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கம் நிறுத்தி மக்களுக்கு உதவிசெய்யவேண்டுமென வாகன உரிமையாளர்கள் வேண்டுகோள்  விடுக்கின்றனர்.

உள்ளக உள்நாட்லுவல்கள் மாகாணசபை மற்றும்உள்ளுராட்சிசபையின் செயலாளர் கமல் பத்மசிறியின் சுற்றுநிருபத்திற்கமைவாக இக்காபன் வரிநாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் அறிவிடப்பட்டுவருகின்றது.

நிதியமைச்சின் அரசிறைக்கொள்கைத்திணைக்களம் விடுத்த பணிப்புரைக்கமைவாகவே மேற்படி உள்நாட்டலுவலக்ள் மாகாணசபைகள் அமைச்சு சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது.

சகல பிரதேச செயலாளர்களுக்கும் இச்சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது இவ்வருடம் ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இக்காபன்வரி அறவிடப்பட்டுவருகிறது. புகை சோதனைக்குட்படும் சகல வாகனங்களுக்கும் இவ்வரி ஏற்புடையது.எனினும் புத்தம் புது வாகனத்திற்கு முதல் வருடம் இது  விதிவிலக்காகவுள்ளது.அத்துடன் புகைபார்க்காத ஹைபிறிட் வாகனங்களுக்கும் விதிவிலக்கு.

ஏனைய அனைத்துவாகனங்களுக்கும் முதல் 5வருடங்களுக்கு 1சி.சி. வலுவுக்கு 5ருபாவும் அடுத்த 5வருடங்களுக்கு 10ருபாவும் 10வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 15ருபாவும் அறிவிடப்பட்டுவருகின்றது. அதன்படி உதாரணமாக 1950 சி.சி வலுவுள்ள ரவுண்ஏஸ் ரக வான் ஒன்றுக்கு காபன்வரி 3000ருபா அறவிடப்படுகின்றது.

இக்காபன்வரி செலுத்தினால்மட்டுமே ஆண்டுலைசன்ஸ் வழங்கப்படுகிறது. காபன்வரி செலுத்தாதவிடத்து ஆண்டுலைசன்ஸ் மறுக்கப்படுகிறது.

ஒருவீட்டில் சமகாலத்தில் 2 அல்லது 3வாகனங்கள் உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன. எனின் இக்காபன்வரியின் தாக்கம் எவ்வாறிருக்கும்?

புகைச்சோதனை வரிக்கு அப்பால் இவ்விதம் காபன்வரி அறிவிடுவதென்பது சாதாரண மக்களுக்கு கடும் பாதிப்பையேற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காரைதீவு நிருபர் Comments