10.05.19- ஆரையம்பதி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு 11இல் ஆரம்பம்..

posted May 9, 2019, 6:35 PM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்திபெற்ற ஆரையம்பதி கண்ணகை அம்பாள்  ஆலய வருடாந்த சடங்கு நிகழும் விகாரி வருடம் சித்திரைத்திங்கள் 28 ஆம் நாள் 11.05.2019 முன்னிரவு 7.00 க்கு திருக்கதவு திறந்துவைகாசி திங்கள் 4 ஆம் நாள் (18.05.2019) பௌர்ணமித்  திதியும விசாக நட்சத்திரமும் பரிகம் யோகமும் கூடிய இரவு 11.00 மணிக்கு திருக்குளிர்த்தி இடம்பெறும்.


11.05.2019 இரவு திருக்கதவு திறத்தலும் அம்மனை அழைத்து வருதலும் இடம்பெறும். தொடர்ந்து 15.05.2019 இரவு கல்யாண கால் வெட்டுதல் மற்றும் கூறைதாலி வைபவம் 16.05.2019 அதிகாலை திருக்கல்யாணச் சடங்கு17.05.2019 அதிகாலை கப்பல்காரர் சடங்கு18.05.2019 அதிகாலை பச்சை கட்டி சடங்கு18.05.2019 நள்ளிரவு திருக்குளிர்த்தி 19.05.2019 இரவு அம்மனை அழைத்து செல்லுதலும் திருக்கதவு அடைத்தலும் கிரமமாக இடம்பெறும்.

சடங்கு காலங்களில் தினமும் கோவலன் கதை படிப்பு இடம்பெறுவதுடன் மாலைச்சடங்கு பிற்பகல் 5.00 மணிக்கும் காலைச்சடங்குகள் அதிகாலை 3.30 க்கும்ம் இடம்பெறும் . கதிரேசர் சடங்கு கப்பல்காரர் சடங்கு மற்றும் பச்சைகட்டி சடங்குகளின் பின்னர் அம்மனின் கும்பம் ஊர் சுற்றுதல் இடம்பெறும்.சடங்கு காலங்களில் பிரதம கட்டாடியார் ஆக த.மகேஸ்வரன் உதவிக்கட்டாடியாராக த.தட்சனாமூர்த்தி   அம்பாளின் பணியாற்றுவார்கள் என ஆரையம்பதி  கந்தசுவாமிஇ கண்ணகை மற்றும் வீரமா காளி அம்மன் ஆலயங்களில் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

காரைதீவு  நிருபர்
Comments