11.05.19- சம்மாந்துறை பிரதேசசெயலகத்தின் சிரமதானநிகழ்வு..

posted May 10, 2019, 7:05 PM by Habithas Nadaraja   [ updated May 10, 2019, 7:12 PM ]
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் 'நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.

6 திகதி முதல் 11ம் திகதி , வரை சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பல்வேறு நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா வழிகாட்லில் முன்னெடுக்கப்பட்டுவருகிகிறது.அந்த வகையில், பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு  , சம்மாந்துறை -10 11 12 கருவட்டுக்கல் - 01 ஆகிய கிராம சேவகர்கள் பிரிவை சேர்ந்த சமூர்த்தி நலனுதவிக் குடும்பங்கள், மற்றும் நலனுதவி பெறாத குடும்பங்கள் ஆகியோர் சம்மாந்துறை மஸ்ஜிதுல் கைர் பள்ளிவாசலில் மாபெரும் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு சிரமதானத்தில் ஈடுபட்டனர்இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உதவி பிரதேச செயலாளர் ஆசீக், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பெரும்பாலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம்' என்ற தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத் தொடரின் மூன்றாம் கட்டம் அம்பாறை மாவட்டத்தில் மே மாதம் 6ஆம்  திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

காரைதீவு நிருபர்Comments