10.05.19- நாட்டுக்காக ஒன்றிணைவோம் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள்..

posted May 9, 2019, 6:29 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், தமன பிரதேசத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், விசேட தேவையுடைய நபர்களுக்கு சக்கர நாற்காளிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலக அலுவலகம் அறிவித்துள்ளது.

தமன பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களுக்கு நேற்று இடர்காப்பு முகாமைத்துவம் பற்றிய பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்காக ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தண்ணீர் பௌஸர்களும் வழங்கப்பட்டன.

தமன பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் காணி கச்சேரியும் ஏற்பாடாகியிருந்தது.


Comments