10.08.17- கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்திய சித்தர்களின் ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி..

posted Aug 10, 2017, 11:55 AM by Habithas Nadaraja
கிழக்கிலங்கை வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நாட்டு மக்களின் நலம் கருதி மாபெரும் வேள்வி இந்திய சித்தர்களிளால் 10008 அபூர்வ காயகல்லு மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி எதிர்வரும்  17.08.2017 18.08.2017ம் திகதிகளில் இந்தியாவின் கொல்லி மலை சித்தர் மஹா வைரவ உபாசகர் காகபுசுண்டர் திருமலிங்களம் சுவாமிகள் தலைமையில் நடைபெறும். 

இவ்வேள்வியில் உலகிலலுள்ள பல மஹா அஷ்ட பைரவ வேள்வி மூலம் உபாயசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்புதியினர் சித்த முறைப்படி இணைந்து இந்த வேள்வியை நடத்த உள்ளனர்.  17.08.2017ம் திகதி காலை மஹா கணபதி ஹோமமும், மாலை 6.00மணிக்கு ஸ்ரீ நவக்கிரக ஹோமமும், 18.08.2017ம் திகதி ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வியும் ஆரம்பமாகும். 

மிகுந்த பொருட் செலவில் நடைபெற இருக்கும் இவ்வேள்வி மூலம் ஸ்ரீ காகபுசுண்டர் ஜீவநாடிப்படி உலக சுபீட்சத்திக்காகவும்  இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும்இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து அனைவரும் சுபீட்சம் பெறுவதற்கும் என இவ்வேள்வி நடாத்தப்படுகிறது.

வேள்வியின்போது பயன்படுத்தப்படும் முதல் சித்த வனங்களளில் இருந்து கொண்டுவரப்படும்.10008 மூலிகைகளின் சக்தி காற்றானது சுக்சும சக்கரங்களையெல்லாம் தூண்டி எமது பிராத்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி எமது உடலுக்கும் மனதுக்கும் மிக பெரிய தெய்வீக மாற்றத்தையும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை தரக்கூடிய வாய்ப்புக்களையும் வழங்கும். இவ்வேள்வியில் அரச உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.எனவே இந் நிகழ்வில் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Comments