11.010.18- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 44வது தேசிய விளையாட்டு விழா..

posted Oct 10, 2018, 6:11 PM by Habithas Nadaraja
44வது தேசிய விளையாட்டு விழா  (11.10.2018)  பிற்பகல் 3.00 மணியளவில் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் மாகாண சபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம மற்றும்  மாகாண சபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா அவர்களின் அழைப்பின் பேரில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் 9 மாகாணங்களிலும் திறமைகாட்டிய வீரா்கள் தேசிய போட்டியில் பங்கேற்று தமது மாகாணத்தின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தேசிய விளையாட்டு விழாவில் மாகாண சபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எம்.ரி.கமல் பத்மசிறி,விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உட்பட  அரசியல் பிரமுகர்கள்,அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


(எம்.ஐ.எம்.றியாஸ்)


 


Comments