11.05.18- பின்தங்கிய வேப்பையடி கலைமகளில் உயர்தர வகுப்பு ஆரம்பம்..

posted May 10, 2018, 6:51 PM by Habithas Nadaraja
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் முதல் தடவையாக க.பொ.த.உயர்தரப்பிரிவு வகுப்பு ஆரம்பிக்கும் நிகழ்வு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 09.05.2018 திகதி  இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் .ஜாபீர் ,நாவிதன்வெளி வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.செல்வபதி, சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து ,ஆசிரிய ஆலோசகர் ஆர்.குணசீலன், வேப்பையடி வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி எஸ்.ஜே.அனீஸ்,நாவிதன்வெளி இலங்கைவங்கியின் முகாமையாளர் கு.சசிதரன் ,நாவிதன்வெளி வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஏ.தனுராஜ் ,வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி .த.நேசராசா மற்றும் பாடசாலைகளின் அதிபர்;கள் அன்னமலை 2 கிராமசேவகர் பிரிவில் உள்ள பொது அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

காரைதீவு நிருபர் 


Comments