11.07.19- தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு தமது பிள்ளைகளை உள்வாங்க சந்தர்ப்பம்..

posted Jul 10, 2019, 6:34 PM by Habithas Nadaraja
தாம் பணியாற்றும் தேசிய பாடசாலையில் 3 வருட காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களுக்கு அந்த பாடசாலைகளிலேயே தமது பிள்ளைகளை சேர்த்து கொள்வதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு இன்று ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 1000 கணக்கான மாணவர்களில் கல்விக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தாம் பணியாற்றும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை உள்வாங்குவதில் பிரச்சினைகள் இன்றி மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் சிறந்த மனநிலையுடன் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆசிரியர் முயற்சிக்க கூடியதாக இருக்கும் என்றும் பயனுள்ள சேவைக்காக கல்வி கட்டமைப்புக்கு வழங்குவது ஊடாக ஒருவகையில் ஊக்குவிப்பும் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.

வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறும் இந்த நடவடிக்கை மூலம் தேசிய பாடசாலைகளில் தரம் 1, 5, 6 மற்றும் தரம் 11 தவிர்ந்த ஏனைய தரங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்களுக்காக இந்த விஷேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments