11.08.17- ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சந்திப்பு..

posted Aug 10, 2017, 6:33 PM by Habithas Nadaraja
இலங்கை வந்துள்ள ஐக்கியஅமெரிக்ககாங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும்யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமானதிரு.சுமந்திரன் அவர்களுக்கும்  இடையிலான சந்திப்பொன்று இன்றுகாலைகொழும்பில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன்,ஹென்றிகியூலர்மற்றும் இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர்அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.  

புதியஅரசியல் யாப்புஉருவாக்கம் தொடர்பில் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்,ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. என்பனவற்றின் உறுப்பினர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொள்ளாதுதமதுஅரசியல் எதிர்காலத்தைமுன்வைத்துச் செயற்படுவதன் நிமித்தம் இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற ஓர் இழுத்தடிப்புநிலவுவதாகத் தெரிவித்தார்.  மேலும்,புதியஅரசியல் யாப்பானதுபாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டுபெரும்பான்மையைப் பெறுவதோடுமாத்திரமல்லாமல்,அதுசர்வசனவாக்கெடுப்புஒன்றின் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  இந்தப் பொன்னானதருணத்தைநாம் தவறவிடக் கூடாதுஎனத் தெரிவித்த இரா.சம்பந்தன்,நான் தமிழ் மக்களின் நன்மைக்காகமாத்திரம் இதைக் கூறவில்லை,மாறாக இலங்கைவாழ் அனைத்துமக்களின் நன்மைக்காகவும் இதனைத் தெரிவிக்கிறேன் எனக் கூறினார். 

மேலும்,பிரிவுபடாத,ஒன்றிணைந்தஐக்கிய இலங்கையைஅடிப்படையாகக் கொண்டுஉருவாகும் புதியஅரசியல் யாப்புத் தொடர்பில் பெரும்பான்மையினஅரசியல் தலைவர்கள் பொதுமக்களிடையேபிரசாரம் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.  அவர்கள் அவ்வாறுசெய்கின்றபோது இந்தக் கருமத்தில் நாங்கள் வெற்றிகாண்பதுமாத்திரமல்ல,ஒருபகுதிமக்களிடையேகாணப்படும் தேவையற்ற சந்தேகங்களையும் அதுநீக்கும் எனவும் கூறினார்.
Comments