11.08.17- தெற்காசியாவில் மூன்றுமுறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் பெற்ற இலங்கைத்தமிழ் கராட்டிவீரர் பாலுராஜ்..

posted Aug 10, 2017, 6:38 PM by Habithas Nadaraja   [ updated Aug 10, 2017, 6:39 PM ]
தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை வீரர் சௌந்தரராஜா பாலுராஜ்  தொடர்ச்சியாக மூன்று முறை (HATRICK) முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

இவர் கிழக்கிலங்கையின் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச்சேர்ந்தவர்.
2014ஆம்  2016ஆம் ஆண்டுகளில் இந்தியா புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஸ்ட்ட பிரிவு காட்டாப்போட்டியில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனைபடைத்தார்.

இறுதியாக இம்மாதம் 05ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் (HATRICK)தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொரு இலங்கைவீரர் என்ற இலங்கை பதிவொன்றையும் (RECORD) ஏற்படுத்தியுள்ளார்.

இவரது பயிற்றுவிப்பாளர் சென்சே பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன் . இவர் வடக்கு கிழக்கிலிருந்து ஆசிய கராட்டேப்போட்டிகளுக்கு மத்தியஸ்தராகத் தெரிவான முதல் வீரராவார். இவர் சர்வதேச 5வது டான் கறுப்புப்பட்டி வீரராவார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ரி.ஈஸ்வரன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் லோகராஜூ சுலக்சன் ஆகியோருடன் இணைந்து பெரும் பாராட்டுவிழாவொன்றை நடாத்த
திட்டமிட்டு வருகிறார்.

காரைதீவு  நிருபர் 


Comments