11.09.18- சாய்ந்தமருதில் பட்டம் கட்டி பட்டம் விடுவோம் கலை நிகழ்வு..

posted Sep 10, 2018, 6:43 PM by Habithas Nadaraja
பட்டம் கட்டி பட்டம் விடுவோம் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கலை நிகழ்வு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் லீடர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலய  மாணவர்களுக்கிடையில்  (06.098.2018) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரசேத செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஷானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் மருதூர் ஏ. மஜீத், லீடர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலய  அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், சாய்ந்தமருது பிரசேத செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.அம்ஜாத், விரிவுரையாளர் மருதநிலா நியாஸ் எம்.அரபாத் உள்ளிட்ட பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் என பலரும் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக இந்நிகழ்ச்சித்திட்டத்தினை கலாசார அலுவல்கள் திணைக்களம் நடைமுறைப்படுத்துவதாக சாய்ந்தமருது பிரசேத செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஷானா இதன்போது தெரிவித்தார்.

இதன்போது சிறந்த முறையில் பட்டம் கட்டி பட்டம் பறக்கவிட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

(றியாத் ஏ. மஜீத்)
Comments