11.09.18- நிந்தவூரில் காளான் பயிர்ச்செய்கை விழிப்புணர்வு..

posted Sep 10, 2018, 6:55 PM by Habithas Nadaraja
கிழக்குமாகாண விவசாயத்திணைக்களத்தின் பிஎஸ்டிபி திட்டத்தின்கீழ் நிந்தவூர் விவசாயப் போதனாசிரியர்  பிரிவில் விவசாயிகளுக்கு காளான் பயிர்ச்செய்கை தொடர்பாக விழிப்புணர்வு செயமர்வு நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இக்காளான் பயிர்ச்செய்கை செயலமர்வில் காளான் செய்கை தொடர்பான பூரண விளக்கமளிக்கப்பட்டது.

இவ்விளக்கமளிக்கும் செயலமர்வு நிந்தவூர் பத்தாம் பிரிவில் இடம்பெற்றது.நிறைய விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் அங்குகூறுகையில் மிகவும் இலகுவாக செய்கை மேற்கொள்ளக்கூடிய இக்காளான்செய்கையால் அடையும் பயன்கள் மிக அதிகமாகும் என்றார்.

காளான் பயிரின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகள் முதன்முதலாகபூரணவிளக்கம் பெற்றுள்ளதாகவும் தாம் காளான் செய்கையை
முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

(காரைதீவு  நிருபர்)

Comments