11.09.18- திருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும்..

posted Sep 10, 2018, 6:51 PM by Habithas Nadaraja
திருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும்!
திருக்கோவில் பிரதேச சபை அமர்வில்  தவிசாளர் கமலராஜன் தெரிவிப்பு..


திருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும். கொழும்பிலுள்ள இதற்கான பணிப்பாளரிடம் புகைபார்க்கும் பரிசோதனை சம்பந்தமாகக் கதைத்துள்ளேன். இதை எதிர்வரும் வருடம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.  தனியாரும் இதனை பொறுப்பெடுக்கலாம் .

இவ்வாறு திருக்கோவில்  பிரதேச சபையின் மாதாந்த அமர்வில்  உரையாற்றிய தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் தெரிவித்தார்.

இவ்வாறு திருக்கோவில்  பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் நடைபெற்றபோது உறுப்பினர்  வே. புவனேந்திரராசா மத்திய சந்தையில் சிறுநீர் அகற்ற கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் மேலும் திருக்கோவில் மணிக்கூடு நேரம் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு வாகனத்திற்கு புகைபார்க்கும் பரிசோதனை நிலையம் திருக்கோவிலில் அமைக்கப்பட வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தவிசாளர் பதிலளித்தார்.

கூட்டத்தில் உபதவிசாளர் சி.விக்கினேஸ்வரன் மற்றும் உறுப்பினர்களான வி.புவிதராஜன்  சி.சதீஸ்குமார் பே.விஜயராசா கோ.காந்தரூபன்
வீ.ஜெயச்சந்திரன் க.தருமராசா வே.கௌரிதேவி க.யாழினி  தெ.தவலோகநாதன் கி.அரியநாயகம் கோ.கமல்ராஜன் வே.புவனேந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

உறுப்பினர்  வி.புவிதராஜன் கூறுகையில்:வேறுபிரதேசத்திற்கு மண் ஏற்றி அனுப்புவது ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறினார். பதிலளித்த தவிசாளர் இ.வி.கமலராஜன் மண் அகழ்வது தொடர்பாக தடுக்க எந்த பொதுமகனும் எனக்கு அறிவிக்கவில்லை என்றார். மீண்டும் உறுப்பினர் வே.புவிதராஜன் கூறுகையில்; டிடிசி கூட்டத்தில் "மண் ஏற்றக்கூடாது  என தெரிவிக்கப்பட்டதாகவும் மண்  அகழ்வுக்கான அனுமதி தழிழ்மக்களுக்கு வழங்கப்படவில்லை "எனவும் கூறினார்.

தவிசாளர் இ.வி.கமலராஜன் கூறுகையில் சாகாமம் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் வழங்குவது குறைந்துள்ளது. சாகாமக்குளம் தோண்டப்படவேண்டும் என DCC   கூட்டம் அம்பாறையில் முடிவு எடுக்கப்பட்டது மேலும் விவசாய அமைப்பு மண் ஏற்றுவதை தடுக்கக் கூடாது எனவும் சபையிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களுக்கு மண் ஏற்ற அனுமதிவழங்கவேண்டும் என  சபையில் முடிவு
எடுக்கப்பட்டது. உறுப்பினர்  வே.கௌரிதேவி கூறுகையில் தம்பிலுவில் மீன் சந்தையையும்,களப்பு கட்டும்  நிர்மானித்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

தவிசாளர்  இ.வி.கமலராஜன்  'வில்காமத்தில் திண்மக்கழிவு தயாரித்தல்தொடர்பாக  03 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக' கூறினார்.  திருக்கோவில் பிரதேச செயலாளர் விஸ்தீரணத்தை அதிகரித்து கேட்குமாறும் மேலும் உடனடியாக இவ்வடத்தை சுற்றி வேலி அமைப்பதாகவும்; யானை வந்து உடைக்காமல்  பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும்; தவிசாளர் இ.வி.கமலராஜன்  கூறுகையில் 'வீதி,  சந்தையிலுள்ள மாடுகளை அடைக்கவேண்டும். மக்களிடமிருந்து முறைப்பாடுகள்கிடைத்தவண்ணமிருக்கின்றன. எனவே மாட்டை அடைக்க சபையினால் எவ்வளவு அழிவுப்பணம் பெறலாம்  கேட்டுக் கொண்டார்.உறுப்பினர் வே. புவனேந்திரராசா கூறுகையில் பிரதேசசபை சட்டப்படி நடவடிக்கைஎடுக்கவேண்டும் என கூறினார். மேலும் இதற்கான தொகை 5000/=

 எனவும் தவிசாளர் கூறினார்.உறுப்பினர்  பே.விஜயராசா கூறுகையில் இதனைநடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தவிசாளர்; 'நாளையிலிருந்துகட்டாக்காலி மாடு அடைக்கப்படும் ' எனக் கூறினார்.உறுப்பினர் வி.புவிதராஜன் : மாடுகளை கட்டி வைத்து ஏதாவது நடந்தால் யார்பொறுப்பு? என வினவினார்அதற்குத்  தவிசாளர் இ.வி.கமலராஜன்  உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் எனத்தெரிவித்தார்.

உறுப்பினர்  கி.அரியநாயகம்: கஞ்சிகுடிச்சாறு குடிநீர் விநியோகம் பற்றி கேட்டார். தவிசாளர்  இ.வி.கமலராஜன்  குடிநீர் பிரதேச செயலகமும், பிரதேச சபையும்சேர்ந்துதான் செய்கின்றது எனவும் மேலும் நிறுவனம் ஒன்றுக்கு கஞ்சிகுடிச்சாறு, உமிரி, முனையகாடு, காஞ்சிரங்குடா, போன்ற இடங்களைஅடையாளப்படுத்தியுள்ளோம். விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத்தெரிவித்தார்.

உறுப்பினர் கோ.கமல்ராஜன்: விநாயகபுரம் மாகாவித்தியாலயத்திற்கு குப்பைஅகற்றுவதற்கு உழவுஇயந்திரம் போகும் நேரம் அறியப்படுத்தப்படவேண்டும்.உறுப்பினர் கோ.காந்தரூபன்: விநாயகபுர நூலகத்திற்கு குடி தண்ணீர்வழங்கப்படவில்லை, தம்பிலுவில் மத்திய சந்தையில் பொது மக்களின் நலன் கருதிபடி அமைக்க வேண்டும் எனக் கூறினார்.

தவிசாளர்  இ.வி.கமலராஜன்  பதிலளிக்கையில் தம்பிலுவிலில் மீன் சந்தைக்குஉரிய இடத்தை அடையாளம் கண்டு நிலம் வாங்க வேண்டும்  இது தொடர்பாக சபையில்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறினார். இது சரஸ்வதி பாடசாலைக்கும் V.Cவீதிக்கும்    இடையில் அமைவது நல்லது என கேட்டுக்கொண்டார். இதை சபைஏற்றுக்கொண்டது.

மேலும் 200 மின்குமிழகளும் 100 செற்றும் கொள்வனவு செய்வதற்கு தீர்மானம்நிறைவேற்றப்பட வேண்டும் என சபையிடம் கேட்டுக்கொண்டார் தவிசாளர். இதை சபைஏற்றுக்கொண்டது. உறுப்பினர்  வே.புவனேந்திரராசா கூறுகையில்:மின்குமிழ்கள் பொருத்துவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் மின்சார கட்டணம் சபையினால் செலுத்தப்படவேண்டி வரும் என்றார்.

(காரைதீவு  நிருபர்)Comments