12.01.19- சிவப்பு மகளிர்  பப்பாளிச் செய்கை விஸ்தரிப்பு..

posted Jan 11, 2019, 7:13 PM by Habithas Nadaraja
விவசாயத்திணைக்களம் நாடெங்கிலும் சிவப்புமகளிர் (Red Lady) பப்பாளிச்செய்கையை விஸ்தரித்துவருகிறது. 

அந்தவகையில் கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தின் 'பிஎஸ்டிஜி' திட்டத்தின்கீழ்  நிந்தவூர் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் பப்பாளிச்செய்கை நிந்தவூப்பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது..

நிந்தவூரின்  முன்னணி விவசாயி முன்னாள் பிரதேசசபை உபதவிசாளர் பி.உமறுகத்தா முன்னிலையில் பப்பாளிச்செய்கைக்கான நடுகைவைபவம் நேற்று நடைபெற்றது.

விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் பப்பாளிக்கன்றுகளை நட்டனர்.

(காரைதீவு  நிருபர்)
Comments