12.01.19- தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை..

posted Jan 11, 2019, 7:09 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாகாணப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல்தினத்திற்கு(15.01.2019) முதல்தினமான (14.01.2019) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா அளித்துள்ளதாக பணிப்பாளர் மன்சூர் மேலும் தெரிவித்தார்.

தைப்பொங்கலுக்கு முதல் தினமான (14.01.2019) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 19.01.2019ஆம் திகதி  நடாத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்விடுமுறை மாகாணப்பாடசாலைகளுக்கு மாத்திரமே அன்றி தேசியப்பாடசாலைகளுக்கு அல்ல என்றும் தெரிவித்தார்.

தைப்பொங்கலையொட்டி இவ்வாறானதொரு விடுமுறையை வழங்கியுள்ளதையொட்டி கிழக்கு தமிழ்ச்சமுகம் ஆளுநருக்கும் மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கும் நன்றிகளைத் தரிவித்துள்ளது.


Comments