12.02.18- ஆலையடிவேம்பில் உதயசூரியனுக்கு 6 ஆசனங்கள்..

posted Feb 11, 2018, 5:43 PM by Habithas Nadaraja
16ஆசனங்களைக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழர்விடுதலைக்கூட்டணி 6ஆசனங்களைப்பெற்று முன்னணியில் உள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களை வேட்பாளர்களாகக்கொண்ட த.வி.கூட்டணி 4586வாக்குகளைப்பெற்று 06ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

3789வாக்குகளைக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 05ஆசனங்களையும் ஜ.தே.கட்சி 2517வாக்குளைப்பெற்று 4ஆசனங்களையும் அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ் 608வாக்குகளைப்பெற்று 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

ஆலையடிவேம்பில் இ.த.அ.கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தெரிந்ததே. 

2006இல் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  ஆலையடிவேம்பு பிரதேசசபையில் 7081வாக்குகளைப்பெற்று 9ஆசனங்களையும் த.தே.கூட்டமைப்பு பெற்றது. பொ.பியசேன (5011வாக்குகள்)தவிசாளாரானார். 2011இல் கே.இரத்தினவேல்(த.தே.கூ) தவிசாளரானார்.

காரைதீவு நிருபர்

Comments