12.05.19- இன்று பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை

posted May 11, 2019, 7:40 PM by Habithas Nadaraja
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை நிலவும்.

இதுதொடர்பில் பொது மக்கள் கூடுதலான அவதானத்துடன் செயல்படவேண்டுமென சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அதிகரித்த வெப்பத்துடனான காலநிலையின் தாக்கம் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வழமையை விட 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்ததாக இந்த வெப்ப நிலை காணப்படும் .

யாழ்ப்பாணம், பதுளை, நுவரெலியா, வவுனியா மற்றும் கடுகஸ்தொட ஆகிய பகுதிகளில் 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து நிலவும் எனவும் வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Comments