12.05.19- உலக அன்னைய தினம்..

posted May 11, 2019, 7:54 PM by Habithas Nadaraja
இந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும்? இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அன்னையரை சந்தித்து பரிசு  பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம் வாழ்த்துகளும் பெறுகின்றனர். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்ற வரிகள் தாய்மையின்  புனிதத்தையும் பெருமையையும், தியாகத்தையும் அடையாளப்படுத்தும் மிக உன்னத வரிகள்.

தாய்மைக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக,  தாயாக, பாட்டியாக என பல்வேறு நிலைகளில் வாழ்க்கையில் வலம் வருகிறாள். இப்படி அனுபவங்களின் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில்  தன்னை நிலைப்படுத்தி கொண்டு வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம் தான் மிக உன்னத இடத்தை வகிக்கிறது.  அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை மேற்கத்திய நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Easwarammaஅந்த வரிசையில் ஒவ்வொரு வருடமும் கனடா ஸ்காபுறோ ஸ்ரீ சத்ய சாயிபாபா மன்றத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பெற்றெடுத்த தெய்வீக அன்னையாகிய ஈஸ்வரம்மா அவர்களின் நினைவாக அன்யைர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் அங்கு பயிலும் மாணவர்களினால் அன்னையின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், நாடகங்கள், பேச்சுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவாற்ற பிரதம விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருமதி கீதா மோகன்ராம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தனது உரையில் சிறுவயதிலிருந்தே தனக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவுடனான ஆன்மீக அனுபவங்களை மிக அழகாக எடுத்துக் கூறினார்.


Comments