12.06.18- வளத்தாப்பிட்டி வில்லுப்பிள்ளையார் ஆலய அலங்காரத்திருவிழா ஆரம்பம்..

posted Jun 11, 2018, 6:25 PM by Habithas Nadaraja
கிழக்கிலங்கையின் தென்பால் எழில் கொஞ்சும் அம்பாரையையடுத்துள்ள பழம்பெரும் பதியாம் வளத்தாப்பிட்டி வில்லுக்குளக்கரையின் அருகிலிருந்து அருளாட்சி புரியும் வில்லுப்பிள்ளையார்(மாணிக்கப்பிள்ளையார்) ஆலய ஆனி திங்கள் அலங்காரத்திருவிழா 12-06-2018 செவ்வாய்க்கிழமைஆரம்பமாகும்.

தொடர்ந்து 9நாட்கள்  விசேடதிருவிழாக்கள் இடம்பெற்று  21-06-2018 வியாழக்கிழமை கங்கை தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

அன்னதானம்  இடம்பெற்று அன்று மாலை அன்று மாலை பூங்காவனமும் பொன்னுஞ்சலும் இடம் பெற்று இரவு வைரவர் பூசையுடன் திருவிழா இனிதே நிறைவுபெறும்.

விசேட நிகழ்வுகளாக 11.06.2018இல்  பூர்வாங்க வாஸ்த்து சாந்தி வழிபாடும் 16-06-2018 இல்  மாம்பழத்திருவிழாவும் 19-06-2018 இல்  வேட்டைத்திருவிழாவும் 20-06-2018இல்  ஊர்வலமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

உற்சவ கால பிரதம குருவாக ஈசான சிவாச்சாரியார் கிரியாசிரோன்மணி சிவஸ்ரீ க.கு.மோஹனாந்த குருக்கள்(ஸ்ரீ சர்வார்த்த சித்தி வினாயகர் தேவஸ்தலம் கல்முனை) முன்னிலையில் ஆலய குரு -சிவஸ்ரீ சோமசுந்தரம் குருக்கள் உதவியுடன் கிரியைகள் இடம்பெறும்.
19-06-2018 இந்து சமய காலாச்சாரத்தினை பிரதி பலிக்கும் நாட்டுக்கூத்து நிகழ்வு இடம்பெறும்.

காரைதீவு  நிருபர் 


Comments