12.07.18- இன்று முதல் கதிர்காம இந்துவிடுதியில் அன்னதானம்..

posted Jul 11, 2018, 6:10 PM by Habithas Nadaraja
இன்று முதல் கதிர்காம இந்துவிடுதியில் அன்னதானம்!
சிவபூமி அன்னதான தொண்டர்சபை இணைப்பாளர் ஞானசுந்தரம் தகவல்..

இன்று(12.07.2018)  முதல் கதிர்காம இந்து யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரின் அன்னதானம் ஆரம்பமாகின்றது என இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

17வது வருடமாக தொடர்ந்து இவ்வன்னதான நிகழ்வை நடாத்திவரும் ஞானசுந்தரம் கதிர்காமத்திலிருந்து தெரிவிக்கையில்:

வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்எஸ்ரீடின் பல பாகங்களிலுமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு பல நூற்றுக்கணக்கானோர் இங்குவருகைதந்துள்ளனர்.

அதனால் இன்றே(12.07.2018) அன்னதானத்தைத் தொடங்கஉள்ளோம்.

தொடர்ந்து தீர்த்தம் நிறைவடையும்வரை மதியம் இரவு அன்னதானமும் தேநீரும் இந்த விடுதியில் வழங்கப்படும்.
எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசா பிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர் எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

நாம் திருக்கேதீஸ்வரத்திலும் அதேவேளை கதிர்காமத்திலும் இதனை பல்லாண்டுகாலமாகச்செய்துவருகின்றோம்.அதற்கு உதவும் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.

மரக்கறிவிலைகள் உச்சக்கட்டத்திலிருந்தபோதிலும் எமது அன்னதானம் வழமைபோன்று தொடர்ந்து எவ்விதகட்டுப்பாடுமில்லாமல் வழங்கப்படும் என்றார்.

காரைதீவு  நிருபர் 




Comments