12.08.17- திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் ஆளணி மீளாய்வுக்கூட்டம்..

posted Aug 11, 2017, 6:22 PM by Habithas Nadaraja   [ updated Aug 11, 2017, 6:34 PM ]
திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் ஆளணி மீளாய்வுக்கூட்டம்:
பலகுறைபாடுகள் தேவைகள் முன்வைப்பு :நிவர்த்திக்க நடவடிக்கை!
நேற்றுமுகாமைத்துவசேவைகள் திணைக்கள மேலதிக பணிப்பாளர்நாயகம் கோபால் விஜயம்!

புதிதாக தரமுயர்த்தப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் ஆளணி மீளாய்வு சம்பந்தமான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நேற்று வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் பி.மோகனகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.

நிதிஅமைச்சின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் அங்கு விஜயம் செய்து வைத்தியசாலை அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடினார்.

அக்கரைப்பற்று – பொத்துவில் ஆகிய இரு நகரங்களுக்கிடையிலான  கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த பின்தங்கிய திருக்கோவில் பெருநிலப்பிரப்பில் அமைந்துள்ள ஒரேயொரு வைத்தியசாலையான திருக்கோவில் வைத்தியசாலை நீண்டகாலகோரிக்கையின் பலனாக  அண்மையில்தான் 'பி'  தர ஆதாரவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

அதனை அண்மையில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எஎல்எம்.நசீர் திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஏலவேயுள்ள மாவட்ட தர வைத்தியசாலைக்குரிய ஆளணிக்கமைய பௌதீகவளங்கள் மற்றும் மனிதவளங்கள் தொடர்ந்தும் பற்றாக்குறையாகவே அமைந்திருந்தன.

விண்ணப்பம்!

அதனைச்சீர்செய்யும் நோக்கில் ஆளணியைஅதிகரிக்கக்கோரும் விண்ணப்பத்தினை உரிய பிராந்திய சுகாதாரத்திணைக்ளம் மாகாணசுகாதாரத்திணைக்களம் என்பவற்றின் சிபார்சினைப்பெற்று வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் மோகனகாந்தனால் சிலமாதங்களுக்கு முன்பு நிதியமைச்சின் முகாமைத்துவச்சேவைப்பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக ஆளணியின் தற்போதைய களநிலைமை மற்றும் அதிகரிப்பதற்கான சாத்தியவள ஏதுக்கள் சீர்செய்வதற்கான ஏற்பாடுகள் பற்றி இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இங்கு பெறப்பட்ட ஆளணி விபரம் மீளாய்வு அறிக்கைகளை கொழும்பு சென்றதும் பணிப்பாளர் நாயகம் பி.சுமணசிங்க தலைமையிலான ஆளணி உருவாக்கக்குழுமுன்னிலையில் சமர்ப்பித்து அதன் அங்கீகாரம் பெறப்பட்டு ஆளணி சீர்செய்யப்படவிருக்கிறது.
கலந்துரையாடல்!

திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையில் இன்னமும் மாவட்ட  வைத்தியசாலைக்குரிய ஆளணி மற்றும் பௌதீகவளங்களே இருந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. சிலவிடயங்களில் மாவட்ட வைத்தியசாலைக்குரிய ஆளணி வளங்கள் கூட இல்லாமலிருக்கின்ற துர்ப்பாக்கியநிலையை வைத்தியஅத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர்.

அவர்களின் சமர்ப்ணத்தை நெடுநேரமாக செவிமடுத்த மேலதிக  பணிப்பாளர்நாயகம் கோபாலரெத்தினம் அவர்களின் சகல கோரிக்கைகளையும் எதிர்வரும் தமது பணிப்பாளர்சபைக்கூட்டத்தில் சமர்க்கவிருப்பதாகக்கூறினார்.

அங்கு பெறப்படுகின்ற அங்கீகாரத்தைப்பொறுத்தே ஆளணி சீர்செய்யப்பட வாயப்புள்ளதாக அவர் அங்கு தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுக்கும் பொத்துவிலுக்குமிடைப்பட்ட சுமார் ஒருலட்சம் மக்களின் வைத்தியசேவையைக்கவனிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வைத்தியசாலை என்றோ தரமுயர்த்தப்படடிருக்கவேண்டும். எனினும் இன்றாவது தரமுயர்த்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.ஆனால் அதற்கான ஆளண மற்றும் பௌதீகவளங்கள் வழங்கப்படாமிலிருந்து வந்தமை கவலைக்குரியதே.

தேவைப்பாடுகள்!
இங்கள் ஆளணி 65 ஆனால் தற்போதைய தரமுயர்த்தலின்பிற்பாடு இருக்கவேண்டிய ஆளணி 120ஆகும். அதனை நிவர்hத்திசெய்யுமாறு குழுவினரால் கோரப்பட்டது.மாவட்டவைத்தியசாலைக்கான வைத்திய அதிகாரிகள் ஆளணி 7 ஆனால் தற்போது இருப்பது ஆக 4 மாத்திரமே. தரமுயர்த்தப்பட்டபிற்பாடு இருக்கவேண்டியது 28வைத்தியஅதிகாரிகள். 04வைத்தியநிபுணர்கள் இருக்கவேண்டும். ஆனால் அங்கு ஓர நிபுணர்கூட இல்லை.

தாதிய உத்தியோகத்தர்கள் 38பேர் இருக்கவேண்டும்.ஆனால் இருப்பதோ 12பேர். சிற்றூழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

மொத்தத்தில் 2013ஆண்டின் ஆளணிக்கமைவாக  அதுவும் மாவட்ட வைத்தியசாலைக்குரிய ஆளணி பௌதீகவளங்கள் கூட பற்றாக்குறையாக உள்ள நிலைவரம்தான் அங்கு காணப்படுகின்றது.

தரமுயர்த்தப்பட்டதன்பிற்பாடுள்ள புதிய ஆளணியை சிருஸ்ட்டித்து  தேவையான ஆளணிகளையும் பௌதிகவளங்களையும் பெற்றுத்தரவேண்டும் என குழுவினர் கெட்டுக்கொண்டனர்.

தீர்வு!
அரச நியதிப்படி எவ்ஆர் 71இன்படி கணிணி வசதிகள் கிடைக்கப்பெற்றபிற்பாடு போதுமானளவு ஆளணிகளை மட்டுப்படுத்தப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. நிதிவசதியும் வரையறையாகவுள்ளது. 
எனினும் மக்கள் சேவை கருதி பின்தங்கிய பிரதேசங்களுக்கான ஆளணிகளை வழங்கவேண்டிய தேவையுமுள்ளது.

இங்கு பெறப்பட்ட தரவுகளையும் கோரிக்கைகளையும் மீளாய்வுசெய்து பணிப்பாளர்  நாயகம் பி.சுமணசிங்க தலைமையிலான எமது குழுக்கூட்டத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.கோபாலரெத்தினம் பதிலளித்தார்.

(காரைதீவு  நிருபர் சகா)Comments