12.08.19- ஆசிரியர் கல்வி சேவையின் தரம் ஒன்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன..

posted Aug 12, 2019, 3:21 AM by Habithas Nadaraja
தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி, உப பீடாதிபதி, ஆசிரியர் மற்றும் கல்லூரி தலைவர் தரத்திற்காக இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் தரம் ஒன்று அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் மாதிரிப் படிவங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன. இது தொடர்பான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.


Comments