12.08.19- நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு..

posted Aug 12, 2019, 3:02 AM by Habithas Nadaraja
10 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கப்பல்துறை பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி  திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஆளுநரின் ஆலோசகருமான அரியவதி கலபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தண, ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் திருமதி முரளிதரன், தினைக்களங்களின் தலைவர்கள், வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

பைஷல் இஸ்மாயில்

Comments