12.10.17- புதுநகரத்திலுள்ள விளாவடி விநாயகர் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்ற 11 மாணவர்கள் புலைமைப்பரிசில் சித்தி..

posted Oct 11, 2017, 6:05 PM by Habithas Nadaraja
மல்வத்தை புதுநகரத்திலுள்ள விளாவடி விநாயகர் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்ற 11 மாணவர்கள் தரம் 05 புலைமைப்பரிசில் பரீட்சையில் இவ் வருடம் சித்தியடைந்துள்ளனர்.இதில் 187 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்ற மாணவியும் இக் கல்வியகத்திலே கல்வி கற்றவர். கடந்த மூன்று வருடங்களாக இக் கல்வி நிலையத்தில் தரம்-05 புலைமைப்பரிசில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்க்கு அருஞ்சேவையாற்றி வருகின்றது. வேதனம் எதுவுமின்றி இக் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களான க.மோகன் வே.கஜேந்திரன் ந.பிரதீபன் ப.டியோஜன ஆகியோர் பணியாற்றிவருகின்றனர்.


Comments