13.01.18- கிழக்குத் தமிழர் ஒன்றியம் உதயம்..

posted Jan 13, 2018, 3:57 AM by Habithas Nadaraja   [ updated Jan 13, 2018, 4:00 AM ]
1987 இந்திய - இலங்கைசமாதானஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப் பெற்றிருந்தவடக்குகிழக்குமாகாணங்கள் 2007ம் ஆண்டுநீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் தனித்தனிமாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபின்னர்கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூகபொருளாதாரஅரசியல் இருப்புநாளாந்தம் கேள்விக்குள்ளாகிவருகிறது. 

இதனைதடுத்துநிறுத்தும் அல்லதுமாற்றுவழியைத் தேடும் ஆத்மார்த்தமானஅக்கறையோஅல்லதுஅரசியல் வல்லமையோதற்போதையதமிழர்தம் அரசியல் தலைமையிடம் இல்லைஎன்பதைஅண்மைக்காலஅரசியல் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. 
இந்தநிலையில் “அழுதும் பிள்ளைஅவளேபெறவேண்டும்”என்பதற்கிணங்ககிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய“அரசியல் பொறிமுறை”க்கானஅடித்தளத்தைஎதிர்வரும் உள்@ராட்சிசபைத் தேர்தல் காலத்திலேயே இட வேண்டியதேவைப்பாடுஎழுந்துள்ளது. ஏனெனில்,உள்@ராட்சி சபை தேர்தலைத் தொடர்ந்துஅடுத்தவருடம் நடுப்பகுதியில் கிழக்குமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளில் நேரடித்; தெரிவும்,மாவட்டமட்டத்திலானவிகிதாசாரமும் 50:50 கலந்தகலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெறலாம் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்தநிலையில் இது பற்றிக் கலந்துரையாடிஎதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டியஅரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானித்துஅதனை இப்போதிருந்தேநடைமுறைப்படுத்தும் நோக்குடன் த.சிவநாதன் (சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஏற்பாடுசெய்யப் பெற்றகலந்துரையாடல் கூட்டம் 06.01.2018ம் திகதிசனிக்கிழமை மு.ப.9.30 

மணிக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடையிலுள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது. 

கலந்துரையாடலின்போதுதெரிவிக்கப்பெற்றகருத்துரைகளின் சாராம்சம் பின்வருமாறு
 
 i.இக்கலந்துரையாடல் அமைப்பின் செயற்பாடுஎதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலுடன் நின்றுவிடாதுபாராளுமன்றத் தேர்தலுக்கும்   விரிவுபடுத்தப் பெறல் வேண்டும். 

 ii.அமைப்பின் செயற்பாடுஅரசியலோடுமட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிழக்குமாகாணத் தமிழர்களின்     சமூகபொருளாதாரகல்விபண்பாடுஉட்பட ஏனைய துறைகளுக்கும் அவசியமேற்படின் நிலப் பாதுகாப்பிற்கானசட்டவடிக்கைகளுக்கும்   எனவிரிபுபடுத்தப் பெறல்வேண்டும். 

 iii.அமைப்பின் செயற்பாடுமட்டக்களப்புமாவட்டத்துக்கும் அப்பால் அம்பாறைமற்றும் திருகோணமலைமாவட்டமாவட்டங்களையும்   உள்ளடக்கிமுழுக் கிழக்குமாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பெறல் வேண்டும். 

 iv.கிழக்குமாகாணத் தமிழர்கள் அனைவரும் கட்சிஅரசியலுக்குஅப்பால் ஓரணியின் கீழ் ஒன்றினையும் வண்ணம் அடிமட்டம்   வரைமக்களைத் தயார்ப்படுத்தல் அவசியம். 

 v.வடக்குமாகாணத்திற்கானஅரசியல் சமன்பாடுகிழக்குமாகாணத் தமிழர்களுக்குப் பொருந்தாது.   கிழக்குமாகாணத்திற்கெனதனியானஅரசியல் வியூகமும் அணுகுமுறையும் வேண்டும். 

 vi.கிழக்குமாகாணத்தமிழர்களின் இனப்பெருக்கவீதமும்,தேர்தலில் வாக்களிப்புவீதமும் அதிகரிக்கப்பெறல் வேண்டும். 

 vii.கிழக்குமாகாணத் தமிழ் பிரதேசங்களில் சமூகநலன் சார்ந்துஏற்கனவே இயங்கிவருகின்றபொதுஅமைப்புக்களை இக்கலந்துரையாடல்        அமைப்பில் உள்வாங்கியதாகஎதிர்காலவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பெறல் வேண்டும். 

 viii. தேர்தல்களிலேவினைத்திறன்மிக்கதிறமையானவேட்பாளர்கள் நிறுத்தப்பெறல் வேண்டும். 

 ix.உணர்ச்சிமயஅரசியலிருந்துவிடுபட்டுஅறிவுபூர்வமானஅரசியலைநோக்கிமக்கள் அரசியல் மயப்படுத்தப்பெறல் அவசியம். 

  x.இந்தஅமைப்புஒருவலுவான–பலம் மிக்க–தமிழ் அரசியல் கட்சிகளின் மீதுஅழுத்தங்களைப் பிரயோகிக்கத் தக்கவகையில் மக்கள்                    அமைப்பாககட்டியெழுப்பப் பெறல்வேண்டும். 

மட்டக்களப்புமாவட்டத்தின் சகலபிரதேசசெயலாளர்பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் விரிவானகலந்துரையாடலின் பின்னர்பின்வரும்; தீர்மானம் ஏகமனதாகநிறைவேற்றப்பெற்றது. 

“எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்சஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகலதமிழ் அரசியல் கட்சிகளும் ஒருபொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்துஓரேஅணியில் போட்டியிடவேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்தவேண்டும். 

இத்தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்குஅவசியமானநடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்காகப் பிரதேசரீதியாகத் தெரிவுசெய்யப்பெற்றசெயற்பாட்டாளர்களைஉள்ளடக்கியநடவடிக்கைகுழுவும் இக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பெற்றது.

இப்புதியஅமைப்புக்குக் “கிழக்குத் தமிழர்ஒன்றியம்”எனப் பெயரிடப்பெற்றுள்ளது. இப்பெயர்வைத்தியகலாநிதிக.அருளானந்தம் அவர்களால் முன்மொழியப்பெற்று ம.ஸ்ரீதரன் அவர்களால் வழிமொழியப்பெற்றுசபையால் ஏகமனதாகஏற்றுக் கொள்ளப்பெற்றது. 

இவ் அமைப்பைஎதிர்காலத்தில் கிழக்குமாகாணத்திற்கானதனியானஅரசியல் கட்சியாகப் பதிவுசெய்யவேண்டும் என்றுசிலரால் முன் வைக்கப்பெற்றகருத்து இக்கூட்டஅழைப்பாளர்களினால் ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை. 


இணைப்பாளர்கள் 
த.சிவநாதன் (சிரேஸ்டசட்டத்தரணி) -    077 6151428
செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் - 077 1900614Comments