13.03.18- அம்பாறையில் அடிகாற்று அடைமழை கூரைகள்சேதம் மீனவர் விவசாயிகள் பாதிப்பு..

posted Mar 12, 2018, 6:53 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடிகாற்றுடன்கூடிய அடைமழை பொழிந்துவருகின்றது.குறிப்பாக கரையோரப்பிரதேசமெங்கும் அடிகாற்றினால் தகரக்கூரைகள் தூக்கிவீசப்பட்டுள்ளன. தொடரும் அடைமழையினால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதுடன மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.அடிகாற்றினால் மரங்கள் முறிந்துவீழ்ந்துள்ளன. மக்கள் அச்சத்திலுள்ளனர்.

இதேவேளை பயங்கரகாற்றினாலும் கடற்கொந்தளிப்பினாலும் மீனவர் கடலுக்குச்செல்லவில்லை. அதனால் கடல்மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.மீனவரின் ஜீவனோபாயமும பாதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அடைமழையினால் விவசாயிகளின் இறுதிகட்ட அறுவடைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.யானைகளின் அடடகாசம் ஒருபுறம் அடைமழை மறுபுறம். மொத்தத்தில் விவசாயிகள் பெரு நஸ்ட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

காரைதீவு  நிருபர் சகா


Comments