13.06.18- சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனாலய தீமிதிப்புச்சடங்கு..

posted Jun 12, 2018, 6:38 PM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்திபெற்ற  சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும்  தீமிதிப்புச்சடங்கும்  எதிர்வரும் 17ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 09நாட்கள் சடங்குகள் தினமும் நடைபெறும். சடங்குகள் யாவும் தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா  தலைமையில் நடைபெறும். 

10ஆம் நாள் அதாவது 27ஆம் திகதி புதன்கிழமை காலை தீமிதிப்பு உற்சவம்  நடைபெறுமென என ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் ம.பாலசுப்பிரமணியம்  தெரிவித்தார். 

எதிர்வரும் 18ஆம் திகதி சம்மாந்துறை பத்திரகாளிஅம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெறும். இதேவேளை 25 ஆம் திகதி அம்மன் வெளிவீதியுலா இடம்பெறும்.

இவ்வாலயத்தின் 9நாள் சடங்குகளையும் கோரக்கோயில் மற்றும் காரைதீவு அன்பர்களே உபயகாரர்களாகநின்று நடாத்துவது குறிப்பிடத்தக்கது.எட்டாம்நாள் சடங்கு 04.07.2018இல் நடைபெற்று வருடாந்த தீமிதிப்பு சடங்கு நிறைவடையுமென தலைவர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவமும் இதே திகதியில் அதாவது யூலை13இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28இல் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு  நிருபர்)


Comments