13.06.18- ஜனாதிபதியின் அதிகாரிகளுக்கும் இந்து சம்மேளனத்தின் தூதுக்குழுவிற்கும் இடையிலான அவசர சந்திப்பு..

posted Jun 12, 2018, 6:35 PM by Habithas Nadaraja
ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இந்து சம்மேளனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தலைமையிலும் என் .கே.எஸ்.திருச்செல்வம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்றது.

எதிர்வரும் கிழமைகளில் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் இற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இந்நாட்டில் வாழும்  இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருக்கும் நிலையிலேயே இவ் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுவரும் வால்வெட்டு சம்பவம் மற்றும் அதன் பின்னணி தொடர்பாகவும் தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்கள தொடர்பாகவும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது தொடர்பாகவும்,யாழ்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவணை தொடர்பாகவும்,தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் அத்துமீறி சட்டத்திற்கு புறம்பாக அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்தப்பட்டுவரும் அரச மற்றும் தமிழ் மக்களின் காணிகள் விடயமாகவும்,விதவைகள் மற்றும் முன்னால் போராளிகளின் மறுவாழ்வு திட்டங்களின் தோல்விகள் தொடர்பாகவும்,நாடுமுழுவதிலும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளின் தேவைகள் தொடர்பாகவும்,கிளிநொச்சி முன்னால் போராளி ஆனந்த சுதாகரணை விடுவிக்க மேற்கொள்ளவேண்டிய படிமுறை உபாயங்கள் தொடர்பாகவும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் தொடர்பாகவும்,தமிழ் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் கலந்துரையாடளின் பின் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் எஸ்.டி.அபே குணசேகர அவர்கள் கூறும்போது  தெரிவித்ததாவது "ஜனாதிபதி அவர்களை இந்து சம்மேளன அதிகாரிகள் சந்திப்பதற்கு முன்னர் என்னை உங்களோடு  முழுவிபரங்களையும் பெற்றுக்கொண்டு கலந்துரையாடுமாறும் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கக்கூடிய விடயங்களை மட்டும் தெரிவு செய்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பணிப்புரைகளை விடுக்குமாறும் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்க முடியாத விடயங்களை மட்டும்  கோவைப்படுத்தி  தன்னுடனான இந்து சம்மேளனத்தின்  அடுத்த சந்திப்பின்போது கொண்டுவருமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்" என்றார்.இச்சந்திப்பில்  வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் .திருச்செல்வம். ராசையா செல்லை யா,பிரதாப் கிருபாகரன், ந.சதாசிவம்,ரா.டிசாந்த் சுரேன்,பூபாலப்பிள்ளை கந்தசாமி ,பொன்சந்திரபோஸ் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
Comments