13.09.17- சம்மாந்துறையில் யானைகள் அட்டகாசம்..

posted Sep 12, 2017, 5:11 PM by Habithas Nadaraja   [ updated Sep 12, 2017, 5:12 PM ]

சம்மாந்துறை  மல்கம்பிட்டிப் பிரதேசத்தில்(11.09.2017)இரவு புகுந்த யானைப்பட்டாளம் மதில்களை இடித்துத்தள்ளிவிட்டு அங்குள்ள வாழைகளை துவம்சம் செய்துள்ளது. மக்கள் அச்சத்துடன் இரவை கழித்தனர். அண்மைக்காலமாக வேளாண்மை அறுவடை முடிந்தகையோடு யானைகளின்  அட்டகாசம்  அதிகரித்தவருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். யானைகளால் துவம்சம் செய்யப்பட்ட வாழைகளை இங்குகாண்கிறீர்கள்.

காரைதீவு நிருபர் சகா
Comments