13.11.17- அனைத்து பல்கலைக்கழக மருத்துவ பீட மற்றும் கல்வி பயிற்சி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன..

posted Nov 12, 2017, 5:28 PM by Habithas Nadaraja
தேவையான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் திருமதி நிலந்தி டீ சில்வா தெரிவிக்கையில் .கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கல்விசார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக 
கூறினார்.

கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பதாக றுஹூணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சமன் விமலசுந்தரவும்குறிப்பிட்டார்.

ஹர்ஷ டீ சில்வா குழுவின் அறிக்கைக்கு அமைய மருத்துவ பீட மாணவர்கள் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். 


Comments